மகனுக்கு புண்ணியம் தரப்போகுது தந்தை பண்ணிய பாவம்..!

3௦ வருடங்களுக்கு முன் தான் ஏற்கனவே ஒருமுறை பண்ணிய பாவத்தை மீண்டும் ஒரு முறை தனது மகனுக்காக பண்ணப்போகிறார் இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன். ஆம் பல இயக்குனர்கள் தங்களது ரீ என்ட்ரிக்காக தங்களது சூப்பர்ஹிட் படங்களின் இரண்டாம் பாகத்தையோ ரீமேக்குகளையோ பண்ணும்போது பாண்டியராஜனால் மட்டும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா என்ன..?

அதோடு இது தனக்கு மட்டுமல்ல, தனது மகன் பிரித்விராஜனுக்கும் சினிமாவில் லைப் ஏற்படுத்திக்கொடுக்கும் விஷயம் என்பதால் தான், தனக்கு சினிமாவில் விலாசம் கொடுத்த ‘ஆண்பாவம்’ படத்தை இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றமாதிரி ரீமேக் செய்ய போகிறார். தந்தை நடித்த கேரக்டரில் தான் மகன் பிரித்விராஜன் நடிக்கப்போகிறார். படத்தின் பெயர் ஆண்பாவம் 99%.

இப்படி ஒரு விஷயம் நடக்கவேண்டும் என்பதற்காகத்தான் இதுநாள் அவரை ‘ஆண்பாவம்’ படத்தின் ரைட்ஸை பலர் கேட்டும் கொடுக்காமல் வைத்திருந்தார் பாண்டியராஜன். தனது மகன் இந்தப்படத்தில் நடிக்க சரியான வயது இப்போதுதான் வந்திருப்பதாக நினைக்கிறார் பாண்டியராஜன். உதயநிதி கூட முன்பு ஒருமுறை ‘ஆண்பாவம்’ ரீமேக் ஆனால் அதில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

ஆண்பாவம்பாண்டியராஜன்பிரித்விராஜன்