பிரசாந்த் ரிட்டர்ன்ஸ்…!

யாராக இருந்தாலும் மாறிவரும் ட்ரெண்டிற்கும் தொழிநுட்பத்திற்கும் ஈடுகொடுத்தால் தான் திரையுலகில் நிலைத்திருக்க முடியும்.. இல்லையென்றால் பின்னால் வருபவர்கள் இவர்களை சீனியர்களாக்கி ஓரங்கட்டி விட்டு முன்னோக்கி ஓடிக்கொண்டு இருப்பர்.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில்தான் இப்போது பிரசாந்த்தும் இருக்கிறார். திறமைசாலி தான்.. கடும் உழைப்பாளியும் கூட.. இன்றைய வாரிசு நடிகர்களுக்கெல்லாம் முன்னோடி.. ஆனாலும் எல்லோருக்கும் வருவதுபோல இவருக்கும் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் இவர் சாதனை என நினைத்து செய்த படங்களான ‘மலையூர் மம்பட்டியான்’, ‘பொன்னர் சங்கர்’ ஆகியவை இவரின் திறமையை உறுதிப்படுத்தின.. என்றாலும் இன்றைய இளம் ரசிகர்களை கவர, தவறிவிட்டன என்றுதான் சொல்லவேண்டும்..

நிற்க.. இதோ ஒரு இடைவெளிக்கு பிறகு புத்துணர்வுடன் சாகசம் செய்ய புறப்பட்டு விட்டார் பிரசாந்த். ஆமாங்க.. பிரசாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் தான் ‘சாகசம்’. புதியவரான அருண்ராஜ் வர்மா இந்தப்படத்தை இயக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் வரும் 19ஆம் தேதியில் இருந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது.. வெல்கம் பிரசாந்த்…!

PrashanthSaahasam
Comments (327)
Add Comment