பிரசாந்த் ஜோடியாக பாலிவுட் ‘ஹாட்கேக்’ நர்கீஸ்..!

நர்கீஸ் பக்ரி..

பாலிவுட் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் ஹாட் கேக்… ‘ராக்ஸ்டார்’, ‘மெட்ராஸ் கஃபே’, ‘மெயின் தேரா ஹீரோ’ என சூப்பர்ஹிட் படங்களில் பாலிவுட் இளம் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர். இப்போது இங்கே கோலிவுட்டுக்கு வருகிறார். பிரசாந்த் தற்போது ஹீரோவாக நடித்துவரும் ‘சாகசம்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுகிறார் நர்கீஸ்.

பிரசாந்த் திறமைசாலி தான்.. கடும் உழைப்பாளி… இன்றைய வாரிசு நடிகர்களுக்கெல்லாம் முன்னோடியும் கூட.. ஆனாலும் எல்லோருக்கும் வருவதுபோல தனக்கும் ஏற்பட்ட தேக்கநிலையை தகர்த்தெறிய முழு உத்வேகத்துடன் நடித்துவருகிறார் பிரசாந்த்.

புதியவரான அருண்ராஜ் வர்மா இந்தப்படத்தை இயக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Arun Raj VarmaMadras CafeNarkis FakriPrasanthRock StarSaahasamSakthi Saravanan