தற்போது ‘சாஹசம்’ படத்தில் நடித்துவரும் பிரசாந்த் கிட்டத்தட்ட அந்தப்படத்தை முடித்துவிட்டார். இது தெலுங்கில் வெளியான ‘ஜூலாயி’ படத்தின் ரீமேக் தான். அதை தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும்ம் படங்களும் பெரும்பாலும் இந்தி, தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படங்களின் ரீமேக்கில் தான்.. தெலுங்கு ‘பத்ரா’, இந்தி ‘ஸ்பெஷல்-26’ என படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன..
இதில் ‘ஸ்பெஷல்-26’ பட ரீமேக்கை டைரக்டர் மாதேஷ் இயக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.. சமீபத்தில் நடைபெற்ற ‘சாஹசம்’ பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மாதேஷ், மேடையில் பேசும்போது, ஸ்பெஷல்-26’ பட ரீமேக்கை இயக்கும் வாய்ப்பை தனக்கு கொடுக்கவேண்டும் என பிரசாந்தின் தந்தை தியாகராஜனிடம் கோரிக்கை வைத்தார். பின்னர் பேசிய தியாகராஜனும் மாதேஷின் திறமை பற்றி குறிப்பிட்டு, தாராளமாக பண்ணுங்கள் மாதேஷ் என க்ரீன் சிக்னல் காட்டினார்.
எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்போதுதான் எதுவும் உறுதியாகும்.. ‘ஜீன்ஸ்’ படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியபோது அவருடன் நெருங்கி பழகிய மாதேஷ், பின்னர் இயக்குனராக மாறியபோது பிரசாந்தை வைத்து ‘சாக்லேட்’ என்கிற ஹிட் படத்தையும் ‘மல மல’ என்கிற ஹிட் பாடலையும் பிரசாந்திற்கு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.