மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘சால்ட் அண்ட் பெப்பர்’ படத்தை தமிழில் ‘உன் சமையல் அறையில்’, தெலுங்கில் ‘உலவச்சாறு பிரியாணி’, கன்னடத்தில் ‘ஒகரானே’ என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் இயக்கி நடித்தார் பிரகாஷ்ராஜ்… ஆனால் அவை, ஹிட்டா, தோல்வியா என்பதைப்பற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கவில்லை
தன்னை மிகவும் கவர்ந்துவிட்ட இந்த கதையை இப்போது இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் பிரகாஷ்ராஜ். லால், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்த கேரக்டரில் இந்தியில் நடிக்க இருப்பவர் தேசிய விருது நடிகரான நானா படேகர். அவருக்கு இந்தக்கதை ரொம்பவே பிடித்துபோய்விட்டதாம். ஒரு விஷயம் தன்னை கவர்ந்துவிட்டால், பிரகாஷ்ராஜ் விடமாட்டார் போல தெரிகிறதே..!