பிப்-3ல் திரைக்கு வருகிறது ‘பிரகாமியம்’

மாறுபட்ட கதை களத்தை கொண்டு சைகோ த்ரில்லராக உருவாகி உள்ள படம் தான் ‘பிரகாமியம்’.. பேரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா..? கதையும் அதே போலத்தான் இருக்கும் என்று அடித்துச்சொல்கிறார்கள் படக்குழுவினர். இந்த நிலையில் வரும் பிப்-3ல் திரைக்கு வருகிறது ‘பிரகாமியம்’. இந்தப்படத்தை பிரதாப் என்பவர் இயக்கி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர் ஆனால் பாடல்களும் காதல் காட்சிகளும் இல்லாத ஒரு ஆழ்மன உலகத்தில் நிகழும் காதல் கதையை சொல்லும் இந்தப்படம் ஒரு விதத்தில் அம்மா செண்டிமெண்ட் உள்ள படமும் கூட. ஆனால் தாயை ஆதரிக்கும் கவிதையோ பாடல்களோ இல்லாமல் உளவியல் ரீதியில் தாய் பாசங்களை வெளிபடுத்தும் ஒரு படமாகவே இது உருவாகியுள்ளது..

எந்தவித கவர்ச்சியோ, இரட்டை அர்த்தம் வசனங்களோ, வன்முறையோ இல்லாத படம் இது. ஆனால் இந்தப்படத்திற்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.. காரணம் இந்தப்படம் அதிக தாக்கத்தை உளவியல் ரீதியாக திரைக்கதை மூலம் மக்கள் மனதில் ஏற்படுத்தும் என்பதற்காக” என்பது தான்.

K. சுமித்ராNaseerPonvannanPragamiyamPsychoஆரணி A.D. மனோகார்த்திசுபாஜான்சன்துரை மாமதுபார்வதிபிரகாமியம்பிரதாப்ராஜ்விஷால்வேலூர் வாசுதேவன்