‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ க்காக மீண்டும் இணைந்த பிரபுதேவா-விஜய்..!

தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் ‘தமிழ்நாடு பிரீமியர் லீக் – 2016′ ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. அதற்கான அணிகளில் வலுவான ஒன்றாக இளம் கிரிக்கெட் வீரர்களை கொண்டு உருவாகியுள்ளது ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி. பிரபல கிரிக்கெட் வீர்ர் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக கொண்ட இந்த அணியின் வீர்ர்கள் லோகோ மற்றும் அணிக்கான தீம் பாடல் ஆகியவற்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார் அதன் உரிமையாளர் ‘ஆல்பர்ட்’ முரளிதரன்.

இந்த நிகழ்வின் போது இயக்குநர் ஏ.எல்.விஜய், நடிகர் பிரபுதேவா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அணிக்கான தீம் சாங் ஆக உருவாகி இருக்கும் ”நம்ம பயலுக மக்கா நம்ம பயலுக” பாடலை பாடலை பிரபுதேவாவும் இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் வெளியிட்டனர். பாடலை இயக்கியது விஜய். நடனம் அமைத்தது பிரபுதேவா. அந்த வகையில் தேவி படத்திற்குப் பின் இந்தப் பாடலுக்காக இருவரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண் காமராஜா எழுதிய பாடலை ஒளிப்பதிவு செய்தவர் ஜீவா ஷங்கர்

PrabudevaTuti PatriotsVijayடூட்டி பேட்ரியாட்ஸ்பிரபுதேவாவிஜய்