17 வருடம் கழித்து மீண்டும் இணைந்த பிரபு-உதயா..!

தற்போது உதயா நடித்து வரும் படம் ‘உத்தரவு மகாராஜா’.. இந்தப்படத்தின் சிறப்பம்சமாக திரைக்கதையில் ஒரு புதிய முயற்சியை இயக்குநர் கையாண்டிருக்கிறார் இயக்குனர் ஆஸிப் குரைஷி. இவர் தமிழ் இந்தி மற்றும் பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். மற்ற திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை, ஆக்ஷன் கலந்த சைக்கோ த்ரில்லர் கதை இது.

இப்படத்தில் பிரியங்கா, சேரா, நிஷா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படத்தில் நாசர், கோவைசரளா, ஸ்ரீமன், மனோபாலா, MS பாஸ்கர், மற்றும் பல நட்சத்திரங்களுடன் நீண்ட இடை வெளிக்குப் பின் குட்டிபத்மினி நடிக்க இருக்கிறார்.

அதைவிட மிக முக்கியமான விதத்தில் பிரபு நடிக்கிறார். உதயா கதாநாயகனாக அறிமுகமான காலகட்டத்தில் அவரது இரண்டாவது படமான ‘திருநெல்வேலி’ படத்தில் பிரபுவுடன் இணைந்து நடித்திருந்தார்.. கிட்டத்தட்ட 17 வருடம் கழித்து மீண்டும் பிரபுவுடன் இணைந்து நடிக்கிறார் உதயா என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மற்றும் பல இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்ய, இசையமைக்கிறார் இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரன்

MS பாஸ்கர்PrabhuUdhayaஉதயாகோவைசரளாசேராநாசர்நிஷாபிரபுபிரியங்காமனோபாலாஸ்ரீமன்