25 வருடங்கள் கழித்து இணைந்து நடிக்கும் ‘சின்னத்தம்பி’கள்’..!

சமீபத்தில் துவங்கப்பட்டுள்ள ‘7 நாட்கள்’ என்கிற படத்தில் இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்திவேல் வாசு கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ‘இளைய திலகம்’ பிரபு நடிக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் 25 வருடங்களுக்கு முன் பி.வாசு இயக்கிய சின்னதம்பி படத்தில் சிறு வயது பிரபுவாக நடித்த சக்திவேல் வாசு அதன்பிறகு பிரபுவுடன் இணைந்து நடிக்கும் படம் இது.

கதாநாயகியாக நிகிஷா பட்டேல் நடிக்க, மற்றுமொரு நாயகியாக அங்கனா ராய் நடிக்கிறார். கணேஷ் வெங்கட்ராம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் பிள்ளை, சின்னி ஜெயந்த், விஷ்ணு, ரேஷ்மி மேனன், தேவதர்ஷினி, மாஸ்டர் ராகவன், வள்ளி விஷிஸ்டா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடங்களில் இயக்குநர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

மதன் கார்க்கி பாடல்களுக்கு இசையமைக்கிறார் விஷால் சந்திரசேகர். இவர் ஜில் ஜங் ஜக் உட்பட பல படங்களுக்கு இசையமைத்தவர். சக்திவேல் வாசுவின் சகோதரர் முறையிலான கௌதம்.ஆர். என்ற புதுமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் சுந்தர்.சி-யிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி அனுபவம் பெற்றவர்.

GowthamPrabuShakthi VasuVishal Chandrasekarகௌதம்.ஆர்விஷால் சந்திரசேகர்