ஸ்பைடர்மேன், ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் இனி பிரபாஸுக்கும் ஒரு இடம்..!


நம்ம ஊரில் கொடிகட்டி பறக்கும் ஹீரோக்களுக்கு நம் உள்ளூர் மக்கள் அங்கீகாரம் கொடுப்பது பெருமைதான் என்றாலும், நம்மவர்களை வெளிநாட்டினர் பாராட்டும்போது தான் அவர்களுக்கான கூடுதல் அங்கீகாரம் கிடைத்ததாகவே நாமும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.. நம்மவர்கள் ஆஸ்கர் விருதை எதிர்நோக்குவதும் அப்படி கௌரவத்திற்கு தானே..?

இன்னொருபக்கம் பிரபலங்களின் உருவங்களை மெழுகுச்சிலையாக வடிவமைத்து வெளிநாட்டு அருங்காட்சயகங்களில் வைப்பதும் கூட நம் நடிகர்கள் கடல் தாண்டி புகழ்பெற்றுள்ளார்கள் என்பதன் இன்னொரு அங்கீகாரம் தான்.. அடையாளம் தான். அந்தவகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஏற்கனவே டுசாட்ஸ் மியூசியத்தில் மெழுகுச்சிலை நிறுவி விட்டார்கள்..

இப்போது அதேபோன்ற கெளரவம் அதிர்ஷ்டம் பாகுபலி’ நாயகன் பிரபாசுக்கும் கிடைத்திருக்கிறது. பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தும் விதமாக உலகப்புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இவர் நடித்த பாகுபலி கதாபாத்திர சிலை நிறுவப்படவுள்ளது.

2017ம் ஆண்டு பேங்காக்கில் நடக்கவுள்ள மேடம் டுசாட்ஸ் நிகழ்வுக்காக பிரபாஸின் மெழுகு சிலை வடிவமைக்கப்பட இருக்கிறது. சினிமாவில் புகழ்பெற்ற கதாபாத்திரங்களான ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், ஜேம்ஸ்பாண்ட் ஆகியோரின் வரிசையில் இனி பாகுபலி நாயகனும் கம்பீரமாக நிற்கப்போகிறார்.

Prabhastelungu industryசூப்பர்மேன்ஜேம்ஸ்பாண்ட்பிரபாஸ்ஸ்பைடர்மேன்