ப(வர்) பாண்டி படத்தில் இப்படி ஒரு வரலாறு ஒளிந்திருக்கிறதா..!

தனுஷ் முதன்முதலாக ‘பவர் பாண்டி’ படம் மூலம் டைரக்சனில் அடியெடுத்து வைத்திருக்கிறார் அல்லவா..? தற்போது இந்தப்படம் ‘ப பாண்டி’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது (வேறென்ன வரிவிலக்கு பிரச்சனைக்காகத்தான்) என்கிற லேட்டஸ்ட் தகவலை அப்டேட் செய்வதுடன் இந்தப்படத்தில் ஒரு சுவாரஸ்யமான வரலாறும் ஒளிந்துள்ளது என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளோம்…

அந்த தகவலை நேற்று ‘ப பாண்டி’ பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட படத்தின் கதாநாயகன் ராஜ்கிரண் தான் கூறியுள்ளார்.. அதை அவர் வாயாலேயே கேட்போம்…

“27வருடத்திற்கு முன் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இன்று மீண்டும் அவரது மகன் மற்றும் என் இயக்குனர் தனுஷ் என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார். இத்தனை வருட காலம் இருந்த ராஜ்கிரணை முற்றிலும் மாற்றி புதிய ராஜ்கிரணை காட்டியுள்ளார். இப்படியொரு கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு தனுஷிற்கு நன்றி” என கூறியுள்ளார் ராஜ்கிரண்.

இந்தப்படத்தில் ராஜ்கிரணுக்கேற்ற கதாபாத்திரம் இருந்ததால் தான் தனுஷ் அவரை கதாநாயகனாக்கினார் என்றாலும் கூட தந்தையால் 27 வருடங்களுக்கு முன் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவரை வைத்து, தானும் இயக்குனராக அறிமுகமாவதன் மூலம் ஒரு புதுமையையைத்தான் செய்துள்ளார் தனுஷ். கூடவே ராஜ்கிரணும்.
Attachments area

DhanushPowerpandiRajkiranதனுஷ்பவர் பாண்டிராஜ்கிரண்