கே.வி.ஆனந்த் – தனுஷ் காம்பினேஷனில் உருவாகிவரும் ‘அனேகன்’ படப்பிடிப்பு நீண்டநாட்களாக நடந்துகொண்டிருப்பதாக உங்களுக்கு தோன்றலாம்.. ஆனால் அதுபற்றி இயக்குனரே விளக்கம் கொடுக்கிறார்.. “எங்கள் படத்தின் ஹீரோயின் அமிரா இந்தியில் இம்ரான் ஹாஸ்மியுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.. இன்னொரு பக்கம் ஹீரோ தனுஷும் இந்தியில் பால்கி டைரக்ஷனில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இருவரின் தேதிகளும் சேர்ந்த மாதிரி கிடைக்க கொஞ்சம் தாமதம் ஆனது.. அவ்வளவுதான்.. இதோ கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இன்னும் இரண்டு பாடல்களும் க்ளைமாக்ஸ் காட்சியும் மட்டும் தான் பாக்கி” என்கிறார் கே.வி.ஆனந்த்..
வரும் ஜூன்-2ஆம் தேதி புதுச்சேரியில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கிறதாம். இங்கே ஒரு பாடல் காட்சி, க்ளைமாக்ஸ் ஆகியவற்றை எடுத்துவிட்டு ஜூலையில் இன்னும் ஒரு பாடலுக்காக ஸ்காட்லாந்து புறப்பட்டு செல்கிறார்களாம். அதேசமயம் இன்னொரு பக்கம் படம் எடுத்தவரைக்கும் எடிட்டிங், டப்பிங் பணிகளும் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம்.