கோவையை அதிரவைத்த ‘போக்கிரி ராஜா’..!


சொன்னமாதிரியே ‘போக்கிரி ராஜா’ பட ஆடியோ ரிலீஸை கோவையில், அதுவும் காதலர் தினத்தன்று அமர்க்களமாக நடத்தி காட்டியிருக்கிறார்கள். ஜீவா, ஹன்ஷிகா, சிபிராஜ் நடித்துள்ள இந்தப்படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ளார்.

சத்யராஜ், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், பாபி சிம்ஹா, நந்திதா, விமல், ரோபோ சங்கர், முனிஷ்காந்த் என பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். காதலர் தினம் என்பதால் விழாவை சிறப்பிக்கும் வகையில் விழாவிற்கு வந்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் இருவரும் மாலை மாற்றி காதலர் தினத்தை மேடையிலேயே கொண்டாடியது தான் நிகழ்ச்சியின் ஹைலைட்டே.

ஏற்கனவே பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டாகியுள்ள ‘அத்துவுட்டா’ பாடலை இமான் மேடையில் பாடும்போது விழாவிற்கு வந்திருந்த நட்சத்திரங்களையும் மேடைக்கு அழைத்து ஆட வைத்தார். இமானின் இசை நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து இதுமாதிரியான இசை நிகழ்ச்சியை அவர் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அனுப்பியிருக்கிறார்களாம் கோயம்புத்தூர் மக்கள்.

CoimbatoreD ImmanHanshikhaJiivaP T SelvakumarPokkirirajaS A ChandrasekarSibiraj