நாளை பெரிய படங்கள் என்கிற அளவில் பார்த்தால் மூன்று படங்கள் ரிலீஸாக இருகின்றன. ஸ்ரீகாந்த், லட்சுமிராய் நடித்த ‘சௌகார்பேட்டை’, ஜீவா, சிபிராஜ், ஹன்ஷிகா நடித்த ‘போக்கிரி ராஜா’ மற்றும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்’ என மூன்று படங்களுமே மூன்று விட பிலேவரில் வெளியாகின்றன.
இதில் போக்கிரி ராஜாவ்க்கு ஏற்பட்ட சிக்கல்கள் நேற்றுடன் விலகியதால் திட்டமிட்டதை விட அதிகமாக சுமார் 400 தியேட்டர்களில் வெளியாகிறது.. ‘பிச்சைக்காரன்’ படம் 350 தியேட்டர்களில் வெளியாகிறது.. கிடைத்த கௌரவமான இடைவெளிகளை ‘சௌகார்பேட்டை’ நிரப்பி விட்டது.. இதில் ‘சௌகார்பேட்டை’ மட்டும் பேய்படம் என்பது குறிப்பிடத்தக்கது.