அஜித்தை அறிமுகப்படுத்தும் ‘போடாபோடி’ இயக்குனர்..!

அஜித்தையாவது.. அறிமுகமாவது.. என விஷயம் புரியாதவர்கள் திட்டுவீர்கள். விஷயம் புரிந்தவர்களோ மேலே சொன்னதை படித்துவிட்டு புன்சிரிப்புடன் நகர்ந்துவிடுவீர்கள்.. விஷயம் இதுதான்.. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் அஜித்தின் அறிமுகப்பாடலை எழுதியிருப்பவர் சாட்சாத் ‘போடாபோடி’ இயக்குனர் விக்னேஷ் சிவன் தான்.

ஏற்கனவே இவர் தான் இயக்கிய ‘போடாபோடி’ படத்திலும் கிருத்திகா உதயநிதி இயக்கிய ‘வணக்கம் சென்னை’ படத்திலும் கூட பாடல்கள் எழுதியிருக்கிறார். இவரை அழைத்த கௌதம் மேனன் சென்னை பாஷையில் அதேசமயம் குத்துப்பாடலாக இல்லாதபடி ஒரு பாடல் எழுதவேண்டுமென்று கேட்டிருக்கிறார்.

இது போதாதா.. “ஆதாரு..ஆதாரு.. உதாரு..உதாரு..” என பாஸ்ட் பீட் பாடல் ஒன்றை எழுதி தர ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அந்த பாடலை வட இந்தியப்பகுதிகளில் சென்று அற்புதமாக படமாக்கியும் வந்துவிட்டார் கௌதம் மேனன். படத்தில் இந்த அறிமுகப்பாடல் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள்.

அஜித்ஆதாரு..ஆதாரு.. உதாரு..உதாரு..கிருத்திகா உதயநிதிகௌதம் மேனன்போடாபோடிவணக்கம் சென்னைவிக்னேஷ் சிவன்ஹாரிஸ் ஜெயராஜ்