“ப்ளீஸ்.. புதுத்துணிகளை கொடுங்க” ; சுகாசினி, ஆர்யா வருத்தம்..!


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் விதமாக நடிகர், நடிகைகள் பம்பரமாக சுற்றி வருகிறார்கள்.. கார்த்தி, விஷாலுடன் கைகோர்த்து இந்த நிவாரண பணிகளிலும் ஆர்யாவும் சுற்றிச்சுழல்கிறார். நிவாரண பணிகளில் அவர் கவனித்த விதத்தில் பலர் உதவி செய்கிறேன் என பழைய துணிகளை கொண்டுவந்து கொடுத்தது, ஆர்யாவை மட்டுமல்ல, பலரையும் சங்கடப்பட வைத்துள்ளது..

“சில பேர் நல்லது செய்யறோம்னு பழைய துணிகள், கிழிஞ்ச துணிகள்லாம் குடுக்கறாங்க. நம்மகிட்ட உதவி வாங்குறவங்க ஒன்னும் பிச்சைக்காரங்க இல்ல. உதவி செய்யணும்னா நல்ல விதமா செய்யுங்க” என வேண்டுகோள் வைத்துள்ளார் ஆர்யா.

நடிகை சுகாசினியும் இதே கருத்தைத்தான் வெளிபடுத்தியுள்ளார். “நம்மிடம் நிவாரணம் பெறுபவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல.. இருப்பதை இழந்து நிற்பவர்கள்.. உங்கள் வீட்டு பீரோவை காலிசெய்வதற்காக, பழைய துணிகளை கொடுத்து அவர்களை அவமானப்படுத்த வேண்டாமே” என கூறியுள்ளார்.

AryaChennaiChennai FloodFlood PeoplesSuhasini