தனுஷ் படத்தில் போலீஸாக நடிக்கும் பின்னணி பாடகர்..!

“எனக்கு நடிக்க ஆர்வம் கிடையாது? வீட்டிலும் சம்மதிக்க மாட்டார்கள். நல்ல கதையம்சம் உள்ள படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தால் அதை பரிசீலிப்பேன்” – இது பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் ‘தலைவா’ படத்தில் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வெளியானபோது மறுப்பு தெரிவித்து கூறிய விஷயம்.

இப்போது கதாநாயகனாக வாய்ப்பு வரவில்லையென்றாலும், தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘மாரி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் விஜய் யேசுதாஸ்.  இதற்கு முன் இவர் 2௦1௦ல் மலையாளத்தில் பாலாவுடன் இணைந்து ‘அவன்’ படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவன்தனுஷ்தலைவாபாலாபாலாஜி மோகன்மாரிவிஜய் யேசுதாஸ்