பியார் பிரேம காதல் படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைஸா வில்சன் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். கே ப்ரொடக்ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரோடு இணைந்து ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்
படத்தின் பாதி வெற்றி அதன் பாடல்களின் வெற்றியில் உள்ளது என்பது எழுதப்பட்ட, நிரூபணமான ஒரு விதி. அப்படித்தான் மிக குறுகிய காலத்திற்குள்ளாகவே ‘பியர் பிரேம காதல்’ படத்தின் High on Love’பாடல் யுவன் சங்கர் ராஜாவின் இசையால் ட்ரெண்டிங்கில் டாப் இடத்திற்கு சென்றதுடன், மில்லியன் பார்வைகளை மிக வேகமாக கடந்திருக்கிறது.
முதல் போதையாக ‘High on Love’ அமைந்தது, நீண்ட காத்திருப்புக்கு பிறகு ‘Dope’ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகிறது. இரண்டு பாடல்களிலேயே பியார் பிரேம காதல் படத்துக்கு ஈர்ப்பு அதிகமாகி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக ‘டோப்’ பாடல் இசை ரசிகர்களின் நரம்புகளுக்குள் புது எனர்ஜியை பாய்ச்சியுள்ளது” என்றார் இயக்குனர் இளன்.
மேலும் படத்தின் முழு ஆல்பத்தையும் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம் என்ற மகிழ்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் இளன். படத்தை கூடிய விரைவில் வெளியிடவும் தீவிரமான முயற்சிகள் நடந்து வருகின்றன.