தமிழ் சினிமாவில் இரண்டு வெவ்வேறு விதமான தளங்களில் இயங்கும் பாலாவும் மிஷ்கினும் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ள படம் ‘பிசாசு’. மாதிரித் தானே இருக்கும்.. அதனாலேயே மிஷ்கினின் முந்தைய படங்களை விட இந்த ‘பிசாசு’ முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.
இந்தப்படத்தில் கதாநாயகனாக நாகா நடிக்க, பிசாசாக நடித்திருக்கிறார் பிரயாகா. இவரை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் மிஸ்கின். பி.சி.ஸ்ரீராமின் குருகுலத்தில் பயின்ற ரவிராய் தான் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர்.
அரோல் குரோலி என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.. தமிழ் பெண் கவிஞர்களில் முக்கியமான ஒருவரான தமிழச்சி தங்கபாண்டியன் இந்தப்படத்தில் பாடல் எழுதுகிறார். இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் அளித்துள்ளனர். ‘பிசாசு’ வரு,ம் டிச-19 முதல் வெள்ளித்திரையில் உலா வர இருக்கிறது.