ரசிகர்களை பயமுறுத்தும் விதமாக ஹாரர் படங்களின் வரிசையில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் ‘ர’. ‘அபகரித்தல்’ என்கிற அர்த்தம் தரும்படியான ஒற்றை தமிழ் எழுத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தை 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த பைலட்டுகளான அஷ்ரப்பும், பிரபு யுவராஜும் சேர்ந்து உருவாக்கியுள்ளார்கள்.
பிரபு யுவராஜ் படத்தை இயக்க, அஷ்ரப் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது இறந்துபோன தனது மனைவியுடன் ஆவியுலகத்திற்கு தொடர்புகொண்டு பேச விரும்பும் ஒரு மனிதனின் முயற்சியும் அதன் விளைவுகளும் தான் என தோன்றுகிறது. ஆனால் “ட்ரெய்லரை பார்த்து நீங்கள் ஊகிக்க கூடிய கதை அல்ல இது” என்கிறார் பிரபு யுவராஜ்.
இந்தப்படத்தை உலகத்திரைப்பட விழாவுக்கு அனுப்பவிருக்கிறார்களாம்.. அதற்கு ஏற்றமாதிரி ஒரு கிளைமாக்ஸும் இங்கு வெளியிடும் படத்தில் அனைவரும் ஒப்புக்கொள்ளும் விதத்தில் ஒரு கிளைமாக்ஸும் வைத்து வெளியிடுகிறார்களாம்.. இந்த மாத இறுதியில் படம் வெளியாகும் என்கிறார் பிரபு யுவராஜ்.