இயக்குனர் பேரரசை படம் எடுக்க தூண்டிய ‘பிச்சுவா கத்தி’ இயக்குனர்..!

சுந்தர்.சியிடம் கலகலப்பு படம் உட்பட சில் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அய்யப்பன். தற்போது ‘பிச்சுவா கத்தி’ படம் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.. தனது குருநாதரின் பாணியில் காமெடியும் தனது பாணியில் கொஞ்சம் ஆக்சனையும் சேர்த்து விறுவிறுப்பான கமர்ஷியல் படமாக ‘பிச்சுவா கத்தி’ படத்தை இயக்கியுள்ளார்.

இனிகோ பிரபாகர் கதாநாயகனாக நடிக்க, செங்குட்டுவன் என்பவர் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீபிரியங்கா இந்தப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் ஆச்சர்யம் என்னவென்றால் இதில் காளி வெங்கட், யோகிபாபு, பாலசரவணன், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் என தமிழ்சினிமாவின் முக்கிய காமெடியன்கள் அனைவரும் இணைந்து நடித்துள்ளனர்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குனர் பேரரசு, ரெமோ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், சாட்டை’ பட இயக்குனர் அன்பழகன், ‘சுந்தரபாண்டியன்’ இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.. இந்தப்படத்தின் கலைஞர்களை வாழ்த்தி பேசிய இயக்குனர் பேரரசு, “ஆரம்பத்தில் நான் வருடத்திற்கு இரண்டு படம் எடுத்துக்கொண்டிருந்தேன்.. பின்னர் அது இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என மாறியது.. இந்தப்படத்தின் ட்ரெய்லர், பாடல் காட்சிகளை பார்த்ததும், விரைவாக எனது புதிய படத்தை துவங்கவேண்டும் என்கிற உந்துதல் எனக்கு ஏற்பட்டுவிட்டது” என கூறியுள்ளார்.

InigoPerarasuஇனிகோபிச்சுவா கத்திபேரரசு