புதிய படத்தில் மீண்டும் இணைந்த ‘பட்டதாரி’ ஜோடி..!

இன்றைய தேதியில் ஒரு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவேண்டும் என்றால் அதற்கு முதல் தேவை நல்ல டைட்டில் தான்.. அது புதுமுகங்களோ, அல்லது ஓரளவு தெரிந்த முகங்களோ என்றாலும் கூட டைட்டில் கவனம் ஈர்க்க வேண்டும். அப்படி உருவாக இருக்கும் படம் தான் ‘நாங்க வேலைக்கு போயிட்டா ஊரை யார் பாத்துக்கிறது’..

ரவுடியிசம் தலைவிரித்தாடும் பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவன், கல்விதான் வாழ்க்கையில் முன்னேற்றம் தரும் என்கிற நம்பிக்கையுடன் கல்லூரியில் படித்து கோல்டு மெடல் வாங்குகிறான்.. ஆனால் காலம் அவனையும் ரவுடியாக மாற்ற முயற்சிக்கிறது. அவன் ரவுடியாக மாறினானா..? அல்லது தான் கற்ற கல்வியை வைத்து பிரச்சனைகளை சாதுர்யமாக எதிர்கொண்டானா என்பதுதான் படத்தின் கதைக்கரு. இதை காதல், காமெடி கலந்து சொல்ல இருக்கிறார்கள்..

சமீபத்தில் வெளியான ‘பட்டதாரி’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அபி சரவணன்-அதிதி இருவரும் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். ஆதி நடித்த அய்யனார் படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.. இவர் கன்னடத்திலும் கூட ஒரு படத்தை இயக்கியுள்ள இவர் இயக்கும் மூன்றாவது படம் இது..

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடி வசனங்களுக்கு சொந்தக்காரரான பொழிச்சலூர் அரவிந்தன் தான் இந்தப்படத்தின் வசனங்களை எழுதுகிறார். வரும் ஜனவரி மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

Naanga Ooruku Poita OOra yaru pathukrathuS.S.ராஜமித்ரன்அதிதிஅபி சரவணன்அய்யனார்ஆதிநாங்க வேலைக்கு போயிட்டா ஊரை யார் பாத்துக்கிறதுபட்டதாரிவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்