“இப்போது வில்லனை ரசிக்கிறார்கள்” – ‘பட்ற’ வில்லன் சாம் பால்..!

 

கடந்த வாரம் வெளியான ‘பட்ற’ படத்தில் அமைதியாக, அதிர்ந்து பேசாத, ஆனால் குரூரமான நடிப்பை வெளிப்படுத்திய சாம் பால் கவனிக்கத்தக்க நடிகராக மாறியுள்ளார். இவர் பொறியியல் படித்தவர் என்பதோடு வழக்கறிஞர் பட்டமும் பெற்றவர்.. அதேசமயம் தற்போது கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றுபவர்.. அப்புறம் எப்படி சினிமாவுக்குள் வந்தாராம்..?

“எங்கள் கல்லூரிக்கு டைரக்டர் ஜெயந்தன் படப்பிடிப்புக்கு லொக்கேஷன் பார்க்க வந்தவர், தன் படத்தில் சிறிய வேடம் இருக்கிறது என்று என்னை அழைத்தார். முதல்நாள் பதற்றமாகவே இருந்தாலும். போகப்போக தைரியம் வந்தது. நானாக எதுவும் செய்யவில்லை. டைரக்டர் ஜெயந்தன் சொன்னபடி நடித்தேன். எனக்கு கிடைக்கும் பாராட்டுக்களுக்கு அவர் தான் காரணம்” என்கிறார்.

கொடூரமான வில்லனாக நடித்துள்ளதால், கல்லூரியிலும் நட்பு வட்டாரத்திலும் ரெஸ்பான்ஸ் எப்படி என கேட்டால், “இப்போது வில்லனை யாரும் திட்டுவதில்லை. ரசிக்கவே செய்கிறார்கள். படம் வெளியான தியேட்டருக்கு போனபோது அவனா நீ என்று என்னைப் பார்த்து சிரித்தார்களே தவிர யாரும் முறைக்கவில்லை. வீட்டில் என் தங்கை மட்டுமல்ல. என் கல்லூரியிலும் மாணவர்கள் மாணவிகளும் ஆரவாரம் செய்து ரசித்தார்கள்” என்கிறார் சாம் பால்

முக்கியமான விஷயம் தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் இணைந்து எடிட்டர் ஆண்டனி இயக்கத்தில் ’ஷட்டர்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறார் சாம் பால்.

‘பட்ற’ வில்லன்இப்போது வில்லனை ரசிக்கிறார்கள்எடிட்டர் ஆண்டனிஏ.எல்.விஜய்சாம் பால்டைரக்டர் ஜெயந்தன்பட்றஷட்டர்