‘பத்து எண்றதுக்குள்ள’.. பயம் காட்டுகிறாரா சீயான்..?

புது இயக்குனர்கள் தான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ டைப்பில் படத்திற்கு ‘கேட்சிங்’கான டைட்டில் வைத்து ரசிகர்கள் மத்தியில் படத்தை பற்றிய ஓர் ஆர்வத்தை ஏற்படுத்துவது வழக்கம். அதாவது டைட்டில் தமிழிலும் இருக்கவேண்டும்.. அதே சமயம் வித்தியாசமாக இருக்கவேண்டும்.. இதுதான் அவர்கள் கான்செப்ட்.

ஆனால் இப்போது முன்னனி இயக்குனர்களும் நடிகர்களும் கூட இந்த சிஸ்டத்தை ஃபாலோ பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.. சில மாதங்களுக்கு முன்பு எங்கேயும் எப்போதும்’ சரவணன் தன்னுடைய படத்திற்கு ‘இவன் வேற மாதிரி’ என முரட்டுத்தனம் தெரிக்கும் ஒரு டைட்டில் வைத்திருந்தார்.

சமீபத்தில் கூட லிங்குசாமி டைரக்ஷனில் அடுத்து கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘எண்ணி ஏழு நாள்’ என எச்சரிக்கை விடும் வகையிலான ஒரு டைட்டிலைத்தான் வைத்தார்கள்.. இதே பாணியில் தான் இப்போது விஜய்மில்டன் டைரக்ஷனில் விக்ரம் நடிக்கும் படத்திற்கு கூட ‘பத்து எண்றதுக்குள்ள’ என பயம் காட்டும் டைட்டிலை வைத்துள்ளார்களாம். இனி எல்லோரும் இந்த ரூட்ல கிளம்பிருவாங்க பாருங்களேன்..

Paththu EnrathukullaVijay MiltonVikramபத்து எண்றதுக்குள்ளவிக்ரம்விஜய்மில்டன்