“எங்கள் கூட்டாளிகளுக்கும் பார்ட்டி டைம் தான்” ; வெங்கட்பிரபு பெருமை

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருகிறார் என்பது போல சென்னை-28 பார்ட்-2 வெற்றியை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பார்ட்டி’. ஜெய், ஷாம், சிவா, சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கஸாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ் மற்றும் சஞ்சிதா ஷெட்டி என மிக முக்கிய நடிகர்களுடன் உருவாகியுள்ள இந்த படம் ஏற்கனவே இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

அதுமட்டுமல்ல முதல் முறையாக, அவரது தம்பி பிரேம்ஜி அமரன் இந்த படத்தில் இசை அமைப்பாளராக வெங்கட்பிரபுவுடன் இணைவது அதிக ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மேலும் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரை அழைத்து வந்து சமீபத்தில் ‘சா சா சாரே என்ற துள்ளலான பாடலை பதிவு செய்துள்ளனர். ஸ்டுடியோவில் அவர்கள் பாடல் பாடிய அந்த ரெக்கார்டிங் வீடியோ ஏற்கனவே வைரல் ஆகியுள்ளது.

நேற்று அந்த சிங்கிள் பாடல் வெளியானது. “பேச வார்த்தைகளே இல்லை. இந்த அழகான, அன்பான சகோதரர்களின் புகழ், நேரம் மற்றும் அவர்களது குரல் ஆகியவற்றை எங்களுக்கு அளித்தது எங்கள் குழுவுக்கு பார்ட்டி நேரமாக அமைந்துள்ளது. இந்த பாடலுக்கு, இந்த கூட்டணிக்கு உருவாகியுள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு, எங்கள் வணிக கூட்டாளிகளுக்கும் பார்ட்டி டைம் தான்” என பெருமையுடன் கூறுகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

இந்தத் திரைப்படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரித்திருக்கிறார். கேங்க்ஸ்டர், நகைச்சுவை படமான இந்த பார்ட்டி, முழுக்க முழுக்க ஃபிஜி தீவில் படமாக்கப்பட்டுள்ளது.

KarthiPartySuriyaகார்த்திசூர்யாபார்ட்டிவெங்கட் பிரபு