பார்த்திபனை அசைச்சுக்க முடியாது..! அசைச்சுக்க முடியாது..!

பொதுவாக திரைப்பட விழாக்களில் கலந்துகொள்பவர்கள் பலர் சம்பிரதாயமாக பேசி வாழ்த்திவிட்டு அமருவார்கள். ஒருசிலர் படத்தில் பணியாற்றியிருக்கும் தன் சமபந்தப்பட்ட நபரை பாராட்டுவார்கள்.. அதுகூட ஒரு சாதாரண புகழுரை மாதிரிதான் இருக்கும். ஆனால் இந்தமாதிரி விழாக்கலுக்கு எல்லாம் நாயகன் என்று ஒருவர் இருக்கிறார்.. அவர் மேடையில் இருப்பது தெரிந்தாலே பார்வையாளர்களுக்கு உற்சாகம் தான்.

அவர்தான் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். எந்த மேடையாகட்டும் ஏற்கனவே ஒரு விழாவில் பேசிய எந்த ஒரு சொல்லாடலையும் இன்னொரு விழாவில் பேசவே மாட்டார். அந்த விழா சமபந்தப்பட்டவர்களையோ அல்லது அந்த விழாவிற்கு வந்திருக்கும் வி.ஐ.பி.க்கள் பற்றியோ அல்லது அவருக்கு முன் பேசியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாகவோ kavithai வார்த்தைகளில் பின்னுவதில் பார்த்திபனை அடிச்சுக்க ஆள் இல்லை.. (அதற்கு அடுத்த இடத்திலும் அவரது சிஷ்யரான கரு.பழனியப்பன் தான் இருக்கிறார்).

அப்படித்தான் நேற்று நடைபெற்ற ஸ்ரீகாந்த்தின் ‘நம்பியார்’ பட இசைவெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்ட பார்த்திபன் தனது பேச்சால் வழக்கம்போல கைதட்டலை அள்ளினார். இந்த விழாவில் ஸ்ரீகாந்த்தின் மனைவி வந்தனா பற்றி குறிப்பிடும்போது, “ஒரு சில பெண்கள் திருமணமானாலும் வந்தேனா, போனனா என்றிருப்பார்கள். ஆனால் இந்த வந்தனா தனது கணவரின் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்காக சிந்திக்கும் அளவுக்கு துடிப்பாக இருக்கிறார்” என குறிப்பிட்டார்.

அதேபோல படத்தை பற்றி பேசும்போது, “இந்தப்படம் நன்றாக இருக்கும் என நம்பி, யார் வாங்கினாலும் அவர்களுக்கு வெற்றிதான். நம்பி, யார் படம் பார்க்கவந்தாலும் அவர்களுக்கு சந்தோசம் தான் என டைட்டிலை வைத்தே வார்த்தைகளில் விளையாடியது பார்வையாளர்களை மட்டுமல்லாது மேடையில் அமர்ந்திருந்தவர்களையும் பரவசப்படுத்தியது.

NambiyarParthibanSrikanthVandana Srikanthநம்பியார்பார்த்திபன்வந்தனாஸ்ரீகாந்த்