முன்பெல்லாம் ஒரு படம் வெளியாகி நான்கைந்து நாட்கள் கழித்துதான் திருட்டி விசிடி விற்பனைக்கு வரும்… அதன்பின் அது குறுகி, படம் வெளியான மறுநாளே ஆன்லைனில் வெளியாக ஆரம்பித்தது.. இப்போது ஒருபடி மேலே போய் படம் வெளியான அன்று காலைக்காட்சியிலேயே திருட்டுத்தனமாக படம் எடுத்து மதியத்திற்குள்ளாகவே ஆன்லைனில் வெளியிட்டு விடுகிறார்கள்..
சமீபத்தில் வெளியான பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்திற்கும் இதுதான் நேர்ந்துள்ளது.. ஆரணியில் உள்ள கிருஷ்ணா என்கிற தியேட்டர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளது. இதுகுறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் பார்த்திபன்.. அவருடன் வந்திருந்த தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு இனி புதிய படங்கள் கொடுக்க தடைவிதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.