பரவை முனியம்மாவுக்கு இனி மாதந்தோறும் பென்சன் ; விஷால் உறுதி..!

சிங்கம் போன்ற தன் கம்பீரக் குரலால் ரசிகர்களைக் கவந்தவர் பரவை முனியம்மா. பாடுவதோடு சில படங்களிலும் நடித்தார். ஆனால் இவரது  புகழ் பல எல்லைகளைத் தாண்டிய அளவுக்கு, இவரால் வறுமைக் கோட்டை தாண்ட முடியவில்லை.  இதில் மனநலம் குன்றிய ஒரு மகன் உள்பட இருமகன்கள் அவருக்கு.

குடும்பத்தில் பெரிதாக வருமானமில்லை சிரமப்படுவதாகக் ஒரு  பத்திரிகையில் பேட்டியில் கூறியிருந்தார் கோவை மதுரை சுற்றுப் பயணத்திலிருந்த விஷால் இந்த தகவலை கேள்விப்பட்டதும் நேரடியாக பரவை முனியம்மாவை அவரது ஊருக்கே சென்று சந்தித்தார்.

மேலும் அவரிடம் ஐயாயிரம் ரூபாய் கொடுத்ததுடன் இனி மாதாமாதம் ஐயாயிரம் ரூபாய் வழங்கி உதவுவதாக உறுதியளித்து, அவரின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று வந்திருக்கிறார். விஷாலுடன் தோரணை படத்தில் நடித்திருந்தார் பரவை முனியம்மா. இது ஒரு பக்கம் இருக்க நடிகர் சங்க தலைவர் சரத்குமாரும் பரவை முனியம்மாவுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறாராம்.

சரத்குமார்தோரணைபரவை முனியம்மாவிஷால்