இந்திய – சிங்கப்பூர் கலைஞர்களின் கூட்டணியில் ‘பறந்து செல்ல வா’..!

சைவம் படத்தில் நடிகராக அறிமுகமாகிய நாசரின் மகன் லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘பறந்து செல்ல வா’. கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தை இயக்கிய தனபால் பத்மநாபன் இயக்கத்தில் முழுநீள நகைச்சுவைக் காதல் திரைப்படமாக இது உருவாகியுள்ளது ‘பறந்து செல்ல வா’. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சிங்கப்பூரில் நடைபெற்றது.

சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி –மூவரும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்தப்படத்தில் சீன நட்சத்திரம் நரேல் கெங் நடித்துள்ளார். இந்திய – சிங்கப்பூர் கலைஞர்களின் பங்களிப்பில் முழுமையான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது ‘பறந்து செல்ல வா’.

இந்தப் படம் முக்கோண காதல் கதை இல்லை என்கிற இயக்குனர், வேண்டுமானால் இது ஆறுகோணம், ஏழு கோணம் கொண்ட காதல் கதைன்னுகூட சொல்லலாம். காதலைத் தேடிக்கிட்டே இருக்கிற ஒரு இளைஞன், அதை எப்படிக் கண்டடைகிறான் என்பதுதான் கதையே. இது வழக்கமான கதைதானேனு தோணலாம். ஆனா, அந்த இளைஞனோட பயணம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்” என்கிறார் தனபால்

Paranthu sella vaaபறந்து செல்ல வா