‘பப்பாளி’யில் காமெடியும் உண்டு.. கருத்தும் உண்டு..


கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் இந்த இரண்டு படங்களின் காமெடி காட்சிகளை ஒளிபரப்பாத சேனல்கள் இல்லை என்றே கூறலாம். இந்த நகைச்சுவை படங்களை இயக்கிய கோவிந்தமூர்த்தி தற்போது இயக்கியுள்ள படம் தான் ‘பப்பாளி’.

இந்தப்படத்தில் விஜய் டிவியின் சரவணன் – மீனாட்சி தொடரின் மூலம் புகழ்பெற்ற செந்தில் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இஷாரா நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் நடித்த பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் பாண்டிச்சேரியில் படமானது.

உலகத்தில் அழியாத சொத்து கல்வி தான். இந்த கல்வியால் மட்டமான வாழ்கையில் இருந்த கதாநாயகன் உயர் மட்டத்திற்கு போனானா இல்லையா என்பதுதான் பப்பாளி படத்தின் திரைக்கதை. இயக்குனரின் முந்தைய படங்களைப்போல இதுவும் நகைச்சுவைப்படம்தான்.

“காமெடி படங்கள் மக்களை மன அழுத்தத்தில் இருந்து விடுபடவைக்கின்றன.. அதனால்தான் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்குகிறேன் அதேபோல இந்த ‘பப்பாளி’யும் மன அழுத்தத்தில் இருக்கும் மக்களை மீட்டு மகிழ்விக்கும். இதுவும் காமெடி படம்தான் என்றாலும் கருத்துள்ள காமெடியாக இருக்கும்.” என்கிறார் மூர்த்தி.

‘மனம் கொத்திப்பறவை’ படத்தயாரிப்பாளர்களின் அடுத்த தயாரிப்பாக உருவாகி வருகிறது இந்த ‘பப்பாளி’. முக்கிய வேடத்தில் சரண்யா பொன்வண்ணன் நடிக்க மற்றும் இளவரசு, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, ஜெகன், கிருஷ்ணமூர்த்தி, கௌரவ வேடத்தில் நிரோஷா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். விரைவில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.

Aadukalam NarenGovinda MoorthyIsharaKaruppasamy KuthagaikararMirchi SenthilNiroshaPappaliSingam PuliVedigundu Murugesan
Comments (0)
Add Comment