‘பண்ணையாரும் பத்மினியும்’ இயக்குனரின் சாதனையை வேறு யாரும் செய்துள்ளார்களா..?

விஜய்சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அருண்குமார்.. அந்தப்படம் பெரிய அளவில் போகாவிட்டாலும் கூட அவரது வொர்க்கிங் ஸ்டைல் விஜய்சேதுபதிக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது.. அதனால் தான் அவருக்கு இரண்டாவதாகவும் தன்னை வைத்து ‘சேதுபதி’ படத்தை இயக்கம் வாய்ப்பை தந்தார்..

‘சேதுபதி’ வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது.. இதனை தொடர்ந்து மூன்றாவதாகவும் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தையே இயக்க இருக்கிறாராம். ஒரு அறிமுக இயக்குனர் தொடர்ந்து மூன்று படங்களிலும் ஒரே ஹீரோவை வைத்து இயக்கும் சாதனையை இதற்குமுன் யாராவது செய்திருக்கிறார்களா என்றால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லையென்றே தெரிகிறது.

Arun KumarPannaiyarum PadminiumVijay Sethupathiஅருண்குமார்பண்ணையாரும் பத்மினியும்விஜய் சேதுபதி