பாண்டிராஜ் ஆரம்பித்த ‘மெரினா புரட்சி’..!

ஒருபக்கம் கார்த்தியை வைத்து படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ள இயக்குனர் பாண்டிராஜ், இன்னொரு பக்கம் ‘மெரினா புரட்சி’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். இந்தப்படத்தை எம்.,எஸ்.ராஜூ என்பவர் இயக்குகிறார். விரைவில் ட்ரெய்லர் வெளியீடு என்று ஒரு போஸ்டரை இன்று வெளியிட்டிருக்கிறார் பாண்டிராஜ்.

அந்த போஸ்டரில் நம் பாரம்பரியத்தை காக்க ஒரு புரட்சி என்கிற வாசகத்தை பயன்படுத்தியுள்ளார். கடந்த வருடம் உலகமே ஆச்சர்யப்படும் வகையில் நம் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக நடத்திய மெரினா புரட்சியை மையமாக வைத்து இந்தப்படம் உருவாக்கி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

கடந்த வருடம் ஜல்லிக்கட்டு புரட்சி தொடங்கி நடந்துவந்த அதே நாளில் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது அதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

Merina PurachiPandirajஎம்.எஸ்.ராஜூபாண்டிராஜ்மெரினா புரட்சி