பாண்டவர் அணி அதிரடி வெற்றி..!

நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் சரிவிகிதத்தில் கலந்து கடந்த இரண்டு மாதங்களாக கடுமையாக போராடிய பாண்டவர் அணி நடிகர்சங்க தேர்தலில் அத்தனை பொறுப்புகளையும் கைப்பற்றியுள்ளது. பெரும்பாலான நடிகர்கள் தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்தினார்கள்.. வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்படும் இறுதி நேரம் வரை சரத்குமாரின் பக்கம் இருப்பது போல் தோன்றிய வெற்றி, இறுதிகட்டத்தில் பாண்டவர் அணிக்கு மகுடம் சூட்டிவிட்டது.

ஆரம்பத்தில் இருந்தே அளவுக்கதிகமான நம்பிக்கையுடன் இருந்த சரத்குமார் அணிக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சிதான்.. இருந்தாலும் வெற்றி பெற்ற அணிக்கு வாழ்த்துக்களை கூறி, தோல்வியை தலைவணங்கி ஏற்பதாக நடிகர் ராதாரவி கூறியுள்ளார். தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாசர், எங்களுக்குள் பிளவு இல்லை.. ஒற்றுமையாக செயல்படுவோம்” என உறுதியளித்துள்ளார். அதை ஆமோதிப்பதுபோல சரத்குமாரும் தனது கருத்தை கூறியுள்ளார்.

வெற்றிபெற்ற பாண்டவர் அணிக்கு நமது behind frames தனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

சரத்குமார்நாசர்பாண்டவர் அணிராதாரவி