எம்.ஜி.ஆருக்கு வெள்ளித்திரையில் மீண்டும் உயிர் கொடுக்கிறார் பி.வாசு..!

இந்தியாவில் எம்.ஜி.ஆர் இன்றும் கடவுளின் அவதாரமாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறார். மலேசியாவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் அவருக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. அன்னாரது சமாதிக்கு வருகை தரும் எண்ணிலடங்கா மக்களின் மனங்களில் இன்றளவும் அவர் வாழ்கிறார் என்பதே அவரது அபிமானத்திற்கு ஒரு மிகப் பெரிய சாட்சி. அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அவரது மாஸ் குறையவில்லை.

இந்நிலையில் விரைவில் உலகெங்கும் வெள்ளித்திரையில் புதிய பரிணாமத்தில் “என் ஃபேஸ்” எனும் முற்றிலும் புதிய, அதியற்புத தொழிற்நுட்பத்தின் மூலம் வலம் வர இருக்கிறார் எம்.ஜி.ஆர். மலேசியாவின் சர்வதேச ஊடக தொழிற்நுட்ப நிறுவனம் ஆரஞ்ச் கவுண்டி, இத்தொழில்நுட்பத்தை கொண்டு கடந்தகால கதாபாத்திரங்களை நிழற்பட யதார்த்தத்தின் மூலம் உயிரோட்டமாக திரையில் உருவாக்கும் ஒரு மென்பொருளை வடிவமைத்துள்ளது.

இந்த சர்வதேச திரைப்படத்தை பிரபல இயக்குனர் பி.வாசு இயக்குகிறார். கதை களமும், கதாபாத்திரங்களும் முறையே மலேசியாவிலும், இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய, பிராந்திய மற்றும் சர்வதேச நடிக-நடிகையர்கள் மற்றும் கலைஞர்கள் இதில் பங்குபெற இருக்கிறார்கள்.

MGRP Vasuஎம்.ஜி.ஆர்பி.வாசு