பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை சம்பாதித்த ஓவியா, உடனடியாக சினிமாவில் படங்களில் நடிக்க ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.. அதற்கேற்றபடி நிறைய வாய்ப்புகள் அவரை தேடிவந்தாலும் நல்ல வாய்ப்பை கைப்பற்ற நேரம் பார்த்து ரிலாக்ஸாகவே காத்திருந்தார் ஓவியா. அந்த காத்திருப்பின் பலனாக, தற்போது மிகப்பெரிய ஆபராக லாரன்ஸுடன் இணைந்து காஞ்சனா-3ஆம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஓவியா.