தனியார் தொலைக்காட்சியில் கமல் நடத்திவரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி பற்றி பல விமர்சனங்கள் வெளிப்பட்டாலும் கூட, நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரிக்கவே செய்து வருகிறது. குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் அனைவராலும் வெறுக்கப்படுகின்ற, ஆனால் பார்வையாளர்களால் பாரட்டப்படுகின்ற நடிகை ஓவியாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் இயக்குனர் சீனுராமசாமி.
“தனது தாய்க்கு கேன்சர் இருந்தநிலையிலும் கூட அந்த விஷயத்தை மனதிற்குள் வைத்துக்கொண்டு வாழ்க்கையை எதாரத்தமாக எதிர் கொண்டவர் ஓவியா.. தன்னம்பிக்கைக்கு உதாரணமாக பாரதி, தாகூர் போன்றவர்களை எடுத்துக்கொள்ள தேவையில்லை.. ஒவியாவே ஒரு முன்மாதிரியான பெண் தான்.. அவருக்கான கதாபாத்திரம் எனது கதைகளில் வரும்போது நிச்சயம் அவரை என படத்தில் நடிக்க வைப்பேன்” என கூறியுள்ளார் சீனுராமசாமி