ஜெய் ஆகாஷ்.. இந்த தமிழ் திரையுலகில் தனது இருப்பை எந்தவகையிலாவது கான்பித்துகொண்டே இருக்கும் நடிகர்.. இவர் நடித்த படங்கள் ஒருபக்கம் ரிலீஸாகாமல் காத்துக்கொண்டு இருக்க, தனது நண்பர்கள் உருவாக்கியுள்ள ‘ஒருதல்’ என்கிற படத்தை தானே தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்.
செந்தில் ஜெகதீசன் ஹீரோவாக அறிமுகம் ஆகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருக்கிறார். மற்றொரு கதாநாயகனாக ஜிதேந்தர் போலீஸ் அதிகாரியாகவும், பிர்லா போஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர். கிருஷ்ணதாசன் ஜெகதீசன் என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.
“ஒரு ஆங்கில கிரைம் த்ரில்லர் படத்தை தமிழில் பார்ப்பதுபோன்ற வேகத்தோடு படம் இருந்தது. இடைவெளியே இல்லாமல் படத்தை பார்த்தேன். பொதுவாகவே இதுபோன்ற த்ரில்லர் படங்களுக்கு பாடல்கள் ஸ்பீடு பிரேக் என்பார்கள். அதனால் படத்தில் பாடல்கள் இல்லை. தமிழில் ஆங்கில படம் பார்க்கும் அனுபவத்தை இந்த படத்தின் மூலம் பெற்றேன். அதன் அடிப்படையில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறேன்” என்கிறார் ஜெய் ஆகாஷ்.