‘ஒரு தலை ராகம்’ சங்கர் இயக்கியுள்ள ‘மணல் நகரம்’..!

டி.ராஜேந்தர் இயக்கிய ‘ஒருதலைராகம்’ படத்தில் ஹீரோவாக நடித்த சங்கர் தற்போது ‘மணல் நகரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் சில படங்களை இயக்கியவர்தான். பாலைவன சொர்க்கமாக கருதப்படும் வளைகுடா நாடான துபாயில் முழுக்க முழுக்க உருவாகியுள்ளது ‘மணல் நகரம்’.

குடும்ப வறுமையால் இந்தியாவிலிருந்து பிழைப்புக்காகச் சென்று வேலைபார்த்து வரும் மூன்று நண்பர்கள் துபாயில் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொள்ள, அவர்கள் அதிலிருந்து மீள்வதற்குப் படுகிற போராட்டம்தான் கதை.

வெயில் தேசத்தில் படப்பிடிப்பு நடத்திய அனுபவம் பற்றி இயக்குநர் சங்கர் கூறும் போது, “துபாயில் சட்டம் கடுமையாக இருக்கிறது சிலர் அங்கு படமெடுத்துவிட்டு வெளியேபோய் அதை தவறாக சித்தரித்ததுண்டு. தவறான காட்சிகளுக்கு நாட்டை பயன்படுத்தி இருப்பது கண்டு விதிகள் கடுமையாக்கி இருக்கிறார்கள். அதனால் அங்கு படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்றால் எங்கு எடுக்கப் போகிறோம் என்ன காட்சி என்று சொல்ல வேண்டும். படத்தின் முழு கதையையும். அரபியில் மொழிபெயர்த்துக் கொடுக்க வேண்டும் அதைப் படித்து நம்மை படப்பிடிப்புக்கு அனுமதிப்பது பற்றி அந்த மீடியா ஆய்வுக் குழுதான் முடிவு செய்யும் ”என்கிறார்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை நடிப்பதற்கென்று இந்தியாவிலிருந்து நாயகன் என மூவர் மட்டுமே சென்றுள்ளனர். மற்ற துணைப் பாத்திரங்கள், கூட்டம், கும்பல் எல்லாம் அங்குள்ளவர்களே பயன்படுத்தப் பட்டுள்ளனர். ‘மணல் நகரம்’ படத்துக்கு துபாயில் 52 நாட்கள் நடத்தி படப்பிடிப்பு முழுப்படத்தையும் எடுத்து முடித்து உள்ளனர்.

‘ஒரு தலை ராகம்’ சங்கர்GowthamManal NagaramOru Thalai Ragam ShankarPrejinThanshikaகௌதம்நாயகி தனிஷ்காப்ரஜின்மணல் நகரம்