காதலர் தினமான பிப்-14ஆம் தேதி ஒரு செல்லுலாயிட் காதல் என்ற புதிய இசை ஆல்பம் ஒன்று சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. குறிப்பாக காதலர்கள் குழுமியிருக்க அமர்க்களமாக, காமெடி கலந்த கலகலப்புடன் காதல் சுகுமார் வெளியிட நடன இயக்குனர் காதல் கந்தாஸ் இசை ஆல்பத்தை பெற்றுக்கொண்டனர்.
இந்த இசை ஆல்பம் பிரபல நகைச்சுவை நடிகை பிந்துகோஷின் மூத்த மகன் திருக்குமரன்.ஆர் எண்ணத்திலும் இயக்கத்திலும் உருவானது. பிந்துகோஷின் இளையமகன் சிவாஜி.ஆர் நடனம் அமைத்துள்ளார். காதல் காலம் படத்தில் நடித்துள்ள ஹீரோ சந்துரு, மற்றும் ஹீரோயின் சார்வி இருவரும் இந்த ஆல்பத்திலும் இணைந்து நடித்துள்ளனர், இந்த ஆல்பத்தின் படமாக்கலை எல்லோரும் பாராட்டினர். அப்படியே எடுத்து படத்தில் ஒரு பாடலாக வைத்துவிடலாம் என்றும் குறிப்பிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட பலவித போட்டிகளில் காதல் ஜோடிகள், திருமணமான தம்பதிகள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அனைவரையும் மகிழ்வித்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் காதல் கந்தாஸ் மற்றும் காதல் சுகுமார் பரிசுகளை அளித்து ஊக்கப்படுத்தினர்.