லாரன்ஸ் தரும் ஒன் ப்ளஸ் ஒன் ஆஃபர்..!

 

‘முனி-3 கங்கா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறார் லாரன்ஸ். படம் இவ்வளவு தாமதமானதற்கு காரணம் லாரான்ஸிற்கு அடிபட்டு அவர் ஐந்து மாதங்கள் சிகிச்சை எடுத்ததால் தான்.

அதுவும் ஒரு வகையில் நல்லாதாகத்தான் போயிற்று. ஓய்வில் இருந்த அந்த ஐந்து மாதங்களில் அடுத்த படத்திற்கான கதையை.. ஸாரி.. கதைகளை தயார் செய்துவிட்ட லாரன்ஸ், அதிலும் ஒரு புதுமையை புகுத்துகிறார். அதாவது ஒரு படம் ஓடும் நேரத்தில் இரண்டு படங்களை உங்களுக்கு காட்டவிருக்கிறார்.

அதற்கேற்ற மாதிரி படத்தின் பெயரைக்கூட ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’ன்னு வித்தியாசமாக வைத்திருக்கிறார். அதாவது இடைவேளைவரை வரை ஒரு படம்.. அதன்பிறகு ஒரு படம்.. இரண்டு கதைகளும் வேறு.. இரண்டில் நடிக்கும் நடிகர்களும் வேறு..

ஒரு படத்தின் பெயர் ‘கருப்பு துரை’.. இதில் லட்சுமிராய் கதாநாயகியாக நடிக்கிறார்.. இன்னொரு படத்தின் பெயர் ‘கிழவன்’.. இதில் ஆண்ட்ரியா தான் ஹீரோயின்.. இரண்டு படத்திற்குமே இரண்டு இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் இந்த இரண்டு படங்களை இயக்குவதும் அதில் கதாநாயகனாக நடிப்பதும் லாரன்ஸ் தான். கவிஞர் விவேகா இந்தப்படத்தின் பாடல்களை எழுதுவதுடன் வசனகர்த்தாவாகவும் அடியெடுத்து வைக்கிறார். எப்படியோ வித்தியாசமான முயற்சிக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் லாரன்ஸ்.

AndreaKaruppu DuraiKizhavanLakshmi RaiLawrenceMuni 3 GangaOru Ticketla Rendu CinemaRaghava LawrenceVivekaஆண்ட்ரியாஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமாகருப்பு துரைகவிஞர் விவேகாகிழவன்முனி-3 கங்காலட்சுமிராய்லாரன்ஸ்