மீண்டும் காமெடி டயலாக் ஒன்று டைட்டில் ஆனது..!

 

சின்ன பட்ஜெட் படங்கள், அதிலும் புதுமுகங்கள் நடிக்கும் படங்களுக்கு முதலில் கதையை தேடுவதற்கு முன் டைட்டிலைத்தான் தேடுகிறார்கள்.. காரணம் படத்தின் டைட்டில் கேட்சிங்க்காக இருந்தால் படத்திற்கு ஈசியாக பப்ளிசிட்டி கிடைத்து விடும் என்பதால்தான்.

அந்த பாணியில் விவேக்கின் காமெடி டயலாக்கான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் டயலாக்காக மாறியபோது மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இதே ரூட்டில் இப்போது வடிவேலுவின் ட்ராக் காமெடியில் ஹிட் டயலாக்கான ‘வெள்ளையா இருக்கிறவன் பொய்சொல்ல மாட்டான்’ என்கிற வசனமும் ஒரு படத்தின் டைட்டிலாக மாறியுள்ளது.

விளம்பரத்துறையிலும் வர்த்தக துறையிலும் ‘அபி’ என்கிற பெயரில் பிரபலமான ஏ.எல்.அபிநிந்திரன் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். ‘காதல்’ புகழ் ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைக்கும் இந்தப்படத்தின் மூலம் இணைத்தயாரிப்பாளராக மாறியுள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஏ.எல்.அபிநிந்திரன்ஜோஸ்வா ஸ்ரீதர்ரவிவர்மன்வடிவேலுவிவேக்வெள்ளையா இருக்கிறவன் பொய்சொல்ல மாட்டான்