மீண்டும் ஒரு பேய்க்கதையில் ஜி.வி.பிரகாஷ்..!

‘டார்லிங்’ படத்தை தொடர்ந்து பிசியான நடிகராகிவிட்ட ஜி.வி.பிரகாஷ், அவருக்கேற்ற மாதிரி, இளைஞர்களை கவரும் விதமாக இளமை துள்ளும் படங்களில் நடித்து வருகிறார்.. இதை தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக மீண்டும் ஒரு பேய்க்கதையில் நடிக்க உள்ளாராம்..

தெலுங்கில் கடந்தவருடம் அஞ்சலி, சீனிவாச ரெட்டி ஆகியோர் நடித்த த்ரில்லர் படமான ‘கீதாஞ்சலி’ தான் தமிழில் ஜி.வி.பிரகாஷுக்காக ரீமேக் ஆகிறது. ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தை இயக்கிய பிரசாத் இந்தப்படத்தை இயக்கவுள்ளாராம். ஆடுகளம் கதிரேசன் இந்தப்படத்தை தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

GvPrakashகதிரேசன்கீதாஞ்சலிஜி.வி.பிரகாஷ்