முகமூடி படத்தில் தனது உழைப்பை எல்லாம் கொட்டி கடுமையாக உழைத்தும்கூட, மிஸ்கினால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியவில்லை. அதனால் இந்தமுறை எதுவும் மிஸ்ஸாகிவிடக்கூடாது என படு கவனமாக, தான் இயக்கிவரும் ஓநாயும்ஆட்டுக்குட்டியும் படத்தை பார்த்துப் பார்த்து செதுக்கிவருகிறார் மிஸ்கின். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான லோன் வுல்ஃப்புரொடக்ஷன்ஸ் மூலமாக இந்தப்படத்தை தயாரிக்கும் மிஸ்கின் இந்தப்படத்தில் பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.
படத்திற்கு இசைஞானி இளையராஜா பின்னணி இசையமைப்பதால் இன்னும் கூடுதல் தெம்புடன் இருக்கிறார் மிஸ்கின். இன்று இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார் மிஸ்கின். ஏற்கனவே முதலில் வெளியிட்ட ட்ரெய்லரே ரசிகர்களை மிரட்டியது. இந்த ட்ரெய்லர் அதைவிட மிரட்டலாக இருக்கும் என்று நம்பலாம்.
814660 227451I dont think Ive read anything like this before. So good to locate somebody with some original thoughts on this subject. thank for starting this up. This site is something that is required on the internet, someone with slightly originality. Very good job for bringing something new to the internet! 215413