தற்போது சிம்புவை வைத்து இரவு பகலாக முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்திவரும் கௌதம் மேனன், கிட்டத்தட்ட இதன் படப்படிப்பை முடித்துவிட்டார். ஏற்கனவே ஒருமுறை தன் கைவசம் வந்து நழுவிப்போன அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு மீண்டும் கிடைத்திருப்பதால் தற்போது உற்சாகத்தில் இருக்கும் கௌதம், “இந்தப்படம் ஒரு ஸ்டைலிஷான மாஸ் எண்டெர்டெயின்மெண்ட் விருந்தாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.