அக்டோபர்-1க்கு தள்ளிப்போனது ‘புலி’ ரிலீஸ்..!

இதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.. செப்டம்பர்-17ல் ‘புலி’ படம் ரிலீஸ் என்று கடந்தமாதம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போதே சற்று சந்தேகத்துடன் தான் சொன்னார் சிம்புதேவன்.. ஆறு நாடுகளில் இந்தப்படத்தின் கிராபிக்ஸ் பணி நடைபெற்று வருவதும் அவற்றை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்டுள்ள கால தாமதமும் தான் இதற்கு காரணம்.

செப்-17 என்பது கிட்டத்தட்ட காலாண்டு தேர்வு நடைபெற்று விடுமுறை விடப்படும் காலம். அந்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்யும் பட்சத்தில் சிந்தாமல் சிதறாமல் வசூலை அள்ளியிருக்கலாம். அக்-1 என்பது மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான சமயம்.. இருந்தாலும் ‘புலி’க்கு ஏது நேரம், காலம் எல்லாம்.. எப்போது வந்தாலும் வரவேற்புதான்.

‘புலி’சிம்புதேவன்