ஓ காதல் கண்மணி ரிலீஸில் ‘அலைபாயும்’ சென்டிமென்ட்..!

மலை போன்ற வெற்றிகளை குவித்த இயக்குனர் மணிரத்னம், ‘கடல்’ படத்தில் ஏற்பட்ட சறுக்கலுக்கு பிறகு மீண்டும் ‘ஓ காதல் கண்மணி’ மூலம்’ உற்சாகமாக திரும்பிவர இருக்கிறார். துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ள இந்தபடத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப்படம் வரும் ஏப்ரல்-14ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

15 வருடங்களுக்கு முன் மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ படம் இதேபோல தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த சென்டிமென்ட்டில் தான் இந்தப்படத்தையும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று ரிலீஸ் செய்கிறாராம். ஆனால் ‘ஓ காதல் கண்மணி’ டீசரிலும் இடம்பெற்ற சில காட்சிகள் ‘அலைபாயுதே’ படத்திலும் இடம்பெற்றிருப்பது கூட இந்த சென்டிமென்ட்டில் சேர்த்தி தானா என்பது தெரியவில்லை.

‘கடல்’அலைபாயுதேஇயக்குனர் மணிரத்னம்ஏ ஆர் ரஹ்மான்ஓ காதல் கண்மணிதுல்கர் சல்மான்நித்யா மேனன்பிரகாஷ்ராஜ்