தற்போது இந்தப்படத்தை நவீன யுகத்திற்கேற்ப ரீமேக் செய்ய இருக்கிறார் மணிவண்ணனின் மகன் ரகு. இந்தப்படத்தின் மெசேஜ் முந்தைய படத்திலிருந்து மாறுபட்டதாக இருக்குமாம். ‘சதுரங்க வேட்டையில் கலக்கிய நட்ராஜ் இந்தப்படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவாரக நடிக்கிறார்.
இந்தப்படத்திற்கு லண்டனை சேர்ந்த நீரோ பிரபா என்பவர் இசையமைக்கிறார்.. இவர் ஏ.ஆர்.ரகுமான் தீமை சேர்ந்தவர் என்பது கூடுதல் சிறப்பு. மணிவண்ணன் தனது 51வது படத்திற்கு இவரைத்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து வைத்திருந்தாராம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் காலமானதால், அந்த வாய்ப்பு கைகூடவில்லை. ஆனால் இப்போது அவரது மகன் மூலம் அவருக்கு மீண்டும் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. படப்படிப்பை ஏப்ரலில் துவங்க உத்தேசித்துள்ளார்கள்.