“என் படங்களை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது” – அஞ்சலி பதிலடி

இயக்குனர் மு.களஞ்சியம்-அஞ்சலிக்கு இடையேயான ‘ஊர்சுற்றிப் புராணம்’ பட பிரச்சனை கடந்த ஒரு வருடமாகவே புகைந்துகொண்டுதான் இருக்கிறது. நேற்று இயக்குனர் களஞ்சியம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “அஞ்சலி தமிழில் நடிக்க வருவதாக இருந்தால் என் படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு பின் வேறு படங்களில் நடிக்கட்டும்.. இல்லையென்றால் அஞ்சலியை சட்டப்படி கோர்ட்டுக்கு இழுப்பேன்” என கூறியிருந்தார்.

இந்த அறிக்கைக்கு மறைமுகமாக, இல்லையில்லை.. நேரடியாகவே உடனடியாக பதிலடி கொடுத்து தனது மக்கள் தொடர்பாளர் மூலமாக பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பினார் அஞ்சலி. அதில், “நான் தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துமுடித்துவிட்டேன். அடுத்ததாக கன்னடத்தில் புனித்ராஜ்குமாருடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன்.

தொடர்ந்து நான் தமிழிலும் நடிக்க இருக்கிறேன். என் மீது எந்த தவறும் இல்லை.. ஒருசிலர் சொல்வதுபோல என் படங்களை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. அதனால் என்னை வைத்து படம் பண்ண நினைப்பவர்கள் தாராளமாக என்னை அணுகலாம்” என தெரிவித்துள்ளார். இதற்கு இயக்குனர் மு.களஞ்சியம் என்னவிதமான அணுகுமுறையை கையாளப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Angadi TheruAnjaliKalakalapuMasala CafeMu KalangiyamOor Sutri PuraanamSettaiThoonga Nagaramஅஞ்சலிமு.களஞ்சியம்