“எனக்கு ஒண்ணுமில்ல.. நான் நன்றாக இருக்கிறேன்” – கமல்

 

கமல் தற்போது நடித்துவரும் ‘பாபநாசம்’ படப்பிடிப்பில் மேக்கப் போடும்போது ஒரு சிறிய ரப்பர் துகள் ஒன்று அவரது மூக்கிற்குள் உள்ள சுவாசப்பாதையில் போய் சிக்கிக்கொண்டது. இதனால் மூச்சு விட சிரமப்பட்ட அவர், அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று அதை சரிசெய்துகொண்டு படப்பிடிப்புக்கு திரும்பினார்.

உடனே இந்த செய்தி “கமலுக்கு மூச்சுத்திணறல் ; மருத்துவமனையில் அனுமதி” என்கிற மாதிரி சீரியஸ் ரேஞ்சில் பரவ ஆரம்பித்துவிட்டது. ஆனால் நேற்று இரவே கமல், “எனக்கு ஒண்ணுமில்ல.. நான் நன்றாக இருக்கிறேன்” என அறிவிப்பு வெளியிட்டு தேவையில்லாத வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

நடந்தது என்னவென்றால் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கிகொண்டு இருக்கும்போதுதான் இப்படி நிகழ்ந்ததாம். அதனால் அப்படியே காயம்பட்ட முகத்திற்கான மேக்கப்புடன் மருத்துவமனைக்கு போனதால் தான் அதனை பார்த்த சிலர் இதை தேவையில்லாமல் பெரிதாக்கிவிட்டார்கள் என்கிறார் கமல்.

கமல்கமல்ஹாசன்கௌதமித்ரிஷ்யம்பாபநாசம்மீனாமோகன்லால்