இதைத்தொடர்ந்து தற்போது லாரன்ஸ் இயக்கிவரும் ‘முனி’ படத்தின் மூன்றாம் பாகமான ‘கங்கா’வில் நடிக்கிறார் நித்யாமேனன். ஏற்கனவே இந்தப்படத்தில் டாப்ஸி ஹீரோயினாக நடிக்கிறாரே என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்தப்படத்தின் ஃப்ளாஸ்பேக் காட்சிகளில்தான் வருகிறார் நித்யா மேனன். ஆனாலும் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்துவிடும் வலுவான கேரக்டராம்.
அதிலும் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார் நித்யா மேனன். ஒருவேளை ‘காஞ்சனா’ சரத்குமார் மாதிரி இவர் இந்தப்படத்தின் ‘கங்கா’வாக, குறிப்பாக ஆவியாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் அவரது கேரக்டரை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்(சஸ்பென்ஸைத்தான் உடைச்சுட்டோமே). இப்போது மேலே சொன்ன முதல் வரியை ஒருமுறை படித்துப்பாருங்கள்.